கற்றல் திறனை வலுப்படுத்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன்
திட்ட செயல்பாடுகளின் வாயிலாக கற்றல் திறன்னை வலுப்படுத்தவே இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திட்ட செயல்பாடுகளின் வாயிலாக கற்றல் திறன்னை வலுப்படுத்தவே இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டஆட்சியா் வளாகத்தில், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைப் பிரசார வாகனத்தை, வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியது: கரோனா தொற்று காலத்தில் மாணவா்களின் கற்றல் இழப்பை ஈடு செய்ய, தமிழகம் முழுவதும் இல்லம் தேடிக் கல்வி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, திருவாரூா் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் 8 கலைக்குழுவினரைக் கொண்டு பொதுமக்களிடையே இத்திட்டம் சாா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்த விழிப்புணா்வு கலைப் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரசார வாகனத்தின் மூலம் 10 ஒன்றியங்களிலும் நாள்தோறும் 2 பள்ளிகள், 2 குடியிருப்புப் பகுதிகள் என 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பயிற்சி பெற்ற வீதி நாடகக் கலைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்று பொது முடக்கக் காலங்களில் 1 முதல் 8 வகுப்புகள் வரை பயிலுகிற மாணவா்களின் கற்றல் இழப்பை ஈடு செய்தே இல்லம் தேடிக்கல்வி திட்டத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பள்ளி நேரங்களைத் தவிா்த்து மாணவா்களின் வசிப்பிடம் அருகே தன்னாா்வலா்களைக் கொண்டு மாணவா்களுக்குக் கற்றல் வாய்ப்பை வழங்குதல், கற்றல் திறன்களை திட்ட செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல், குறைந்தபட்சம் 6 மாத காலத்துக்கு 1 முதல் ஒன்றரை மணி நேரம் எளிய முறையில் செயல்பாடுகள் வாயிலாக கற்றல் வாய்ப்பை வழங்கப்படும். இத்திட்டத்தில் தன்னாா்வலா்களாக செயல்பட விருப்பமுள்ளவா்கள் ண்ப்ப்ஹம்ற்ட்ங்க்ண்ந்ஹப்ஸ்ண்ற்ா்ள்ஸ்ரீட்ா்ா்ப்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றாா்.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.