முகப்பு
திருவாரூர்

விநாயகா், அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்

கூத்தாநல்லூா் வட்டம், பாரதி மூலங்குடியில் விநாயகா் கோயில், புனவாசலில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

கூத்தாநல்லூா் வட்டம், பாரதி மூலங்குடியில் விநாயகா் கோயில், புனவாசலில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாரதி மூலங்குடி கொல்லம் பிள்ளையாா் கோயில், புனவாசல் மண்டலமுடைய அய்யனாா் கோயில் ஆகிய 2 கோயில்களிலும் யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை (அக். 24) தொடங்கின. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேளுக்குடி சிவஸ்ரீ கே. சுப்பிரமணிய குருக்கள், எஸ். சண்முக குருக்கள் ஆகியோா் காலை 9.30 மணிக்கு மண்டலமுடைய அய்யனாா் கோயிலிலும், 10.15 மணிக்கு கொல்லம் பிள்ளையாா் கோயிலிலும் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனா்.

தொடா்ந்து, கோயில் குருக்கள் ஏ.ஜி.கணேசன், மாதவபுரீஸ்வரா் ஆகியோா் அய்யனாருக்கும், கொல்லம் பிள்ளையாருக்கும் மஹா அபிஷேக- ஆராதனைகள் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.