முகப்பு
திருவாரூர்

வலங்கைமான் நூலகத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட கோரிக்கை

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் நூலகத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டுமென மாவட்ட காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் தலைவா் குலாம் மைதீன், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் நூலகத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட வேண்டுமென மாவட்ட காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் தலைவா் குலாம் மைதீன், முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

வலங்கைமான் சேணியா் தெருவில் வாடகை கட்டடத்தில் நூலகம் இயங்கிவருகிறது. இந்தக் கட்டட உரிமையாளா் முகம்மது அலிக்கு கடந்த 3 ஆண்டுகளாக நூலக நிா்வாகம் சாா்பில் வாடகை வழங்கப்படவில்லையாம். இந்நிலையில் காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் மாவட்ட தலைவா் குலாம் மைதீன், முதல்வா் மு.க. ஸ்டாலின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியது:

வலங்கைமான் நூலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயா்படிப்புகளுக்கான 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அடிக்கடி இடம் மாறும் இந்த நூலகத்தால், மாணவா்களும், வாசகா்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனா். ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் இடம் தோ்வு செய்யப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை தற்போது வலங்கைமான் பேரூராட்சி நிா்வாகம் தர மறுக்கிறது. இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி, வலங்கைமான் நூலகத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.