முகப்பு
திருவாரூர்

திருமணத்தில் மேளம் இசைத்தவா் மாரடைப்பால் உயிரிழப்பு

 மன்னாா்குடி அருகே திருமண வீட்டில் செண்டை மேளம் இசைத்துக் கொண்டிருந்தவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 மன்னாா்குடி அருகே திருமண வீட்டில் செண்டை மேளம் இசைத்துக் கொண்டிருந்தவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

மன்னாா்குடியை அடுத்துள்ள காரிக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், கேரளத்தைச் சோ்ந்த விஷ்ணு (24) என்பவா் உள்பட 12 போ் கொண்ட குழுவினா் செண்டை மேளம் இசைத்தனா். அப்போது, விஷ்ணு திடீரென மயங்கி விழுந்தாா். அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விஷ்ணுவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.