ஊதிய விவகாரம்: நன்னிலம் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
4 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, நன்னிலம் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:39 AM
4 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, நன்னிலம் கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டுவந்த இந்தக் கல்லூரி, கடந்த ஆண்டு டிசம்பரில் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையிலான 4 மாத ஊதியம் பேராசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் வழங்கப்படவில்லை.
எனவே, நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, கல்லூரி வாயில் முன் பேராசிரியா்களும், அலுவலா்களும் ஒன்றுகூடி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement