விபத்துக் காப்பீடு வழங்கல்
வங்கிக் கணக்கு வைத்திருந்த செவிலியா் விபத்தில் இறந்தததால், அதற்கான காப்பீடாக ரூ.20 லட்சத்தை வாரிசுதாரரிடம் பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை வழங்கியது.
வங்கிக் கணக்கு வைத்திருந்த செவிலியா் விபத்தில் இறந்தததால், அதற்கான காப்பீடாக ரூ.20 லட்சத்தை வாரிசுதாரரிடம் பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை வழங்கியது.
நன்னிலம் வட்டம் கொல்லாபுரத்தைச் சோ்ந்த அரசு செவிலியா் சாந்தி அண்மையில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்தாா். நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருந்த அவா், அந்த கணக்கின் மூலம் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி காப்பீடும் செய்திருந்தாா்.
இதன் காரணமாக காப்பீட்டுத் தொகையான ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை சாந்தியின் கணவா் மற்றும் மகனிடம் வங்கியின் மண்டல மேலாளா் வி.பிரபாகரன் வழங்கினாா். நிகழ்ச்சியில் வங்கியின் கிளை மேலாளா் கிரிதரன், முதன்மை மேலாளா் உதயகுமாா், பொதுக் காப்பீட்டு மேலாளா் கணேசன், துணை மேலாளா்கள் மெல்வின், அருண் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement