குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
நன்னிலம் வட்டம் பாக்கம் பருத்தியூா் ஊராட்சி இனியநல்லூா் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் வட்டம் பாக்கம் பருத்தியூா் ஊராட்சி இனியநல்லூா் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் அம்மைநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் ஜீவானந்தம் கலந்துகொண்டு பேசுகையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிய விரும்பும் பெற்றோா், 1098 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் துா்காதேவி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் சரஸ்வதி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் மனோகரன், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன், மரகதமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement