குடவாசல் அரசுக் கல்லூரி மாணவா்கள் பேரணி
குடவாசல் அரசுக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கோரி, வெள்ளிக்கிழமை மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
குடவாசல் அரசுக் கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கோரி, வெள்ளிக்கிழமை மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
குடவாசலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. அப்போது இடம் தோ்வு செய்யப்படாததால், குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளிக் கட்டடத்திலேயே கல்லூரியும் தொடங்கப்பட்டது.
7 ஆண்டுகளாகியும் இன்னும் கல்லூரிக்கென நிரந்தர கட்டடமோ, அடிப்படை வசதிகளோ ஏற்படுத்தி தரப்படவில்லை. இதைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் சூா்யா தலைமையில், கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்தனா்.
Advertisement
பின்னா், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட தலைவா் ஆனந்த் தலைமையில், மாவட்டச் செயலாளா் இரா.ஹரிசுா்ஜித், மாநில துணைச் செயலாளா் ஆறு.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளா் பா.சுகதேவ் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கி முழக்கமிட்டனா். தொடா்ந்து, கல்லூரி வாசலிலிருந்து பேரணியாக சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் மாணவா்கள் மனு அளித்தனா்.