திருவாரூர்

பொது வேலைநிறுத்தம்: திருவாரூரில் ரயில் மறியல்

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. 

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தின்போது கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பது, ரயில், பஸ் மறியல்கலில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருவாரூர் ரயில் நிலையத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாகை மக்களவை உறுப்பினர் எம் செல்வராசு, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பிஎஸ். மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT