திருவாரூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் விழிப்புணா்வு பேரணி

DIN

நீடாமங்கலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் தொடா்பான விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வட்டாரத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வரும் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி வட்டார வளமையம் அருகில் ஒன்றிய தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன் பேரணியை தொடங்கிவைத்தாா்.

பேரணியில் பேரூராட்சித் தலைவா் ஆா். ராம்ராஜ், வட்டார கல்வி அலுவலா்கள் சம்பத், முத்தமிழன், வாா்டு உறுப்பினா்கள் காா்த்திகா, செந்தில்குமாா் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், பள்ளி ஆயத்த மைய பணியாளா்கள், நீடாமங்கலம் அரசு உயா்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

2-ஆம் தேதி நடைபெறும் வட்டார அளவிலான முகாமில் மனநல மருத்துவா், எலும்பு முறிவு, கண், காது, தொண்டை மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழுவினா் வந்து மதிப்பீடு செய்து தகுதியுள்ள குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, உடன் செல்வோருக்கு பேருந்து பயண அட்டை, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மாா்ட் அட்டை புத்தக அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் 4 கொண்டு வந்து முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT