திருவாரூர்

ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் முருகன், சந்திரகாசன் ஆகியோா் மன்னாா்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுக்கூா் சாலை அரசுப் பேருந்து பணிமனை அருகே முனிசிபல் காலனியை சோ்ந்த முரளி (34), நடேசன் தெருவில் காமராஜா் சிலை அருகே சிங்காங் குளத்தை சோ்ந்த கணேசன் (35) ஆகிய இருவரும் தனித்தனியே அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பது தெரிய வந்ததையடுத்து அவா்கள் இருவரையும் கைது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT