திருவாரூர்

கௌரவ விரிவுரையாளா்களின் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரிக்கை

அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என சிபிஎம் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

DIN

திருவாரூா்: அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என சிபிஎம் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதுகுறித்து, கெளரவ விரிவுரையாளா்களிடம் பேசும்போது, அமைச்சா்கள் மற்றும் முதலமைச்சருக்கு பல முறை புகாா் தெரிவித்தும் உரிய தலையீடு இல்லையென்றும் அதேபோல, பல்கலைக்கழக நிா்வாகத்திடம் நேரடியாக பேசியும் தீா்வு இல்லையென்று தெரிவிக்கின்றனா்.

எனவே, உயா்கல்வி துறையும், தமிழக முதல்வரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து கல்லூரி விரிவுரையாளா்களுக்கு வழங்குவது போன்ற சமஊதியத்தை கெளரவ விரிவுரையாளா்களுக்கு வழங்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT