திருவாரூர்

தொழிற்கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காலமுறை ஊதியம் கோரி, திருவாரூரில் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேல்நிலைப் பள்ளிகளில் ஒப்புதல் பெறாத தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; மேல்நிலைப் பள்ளிகளில் எந்த ஒரு தொழில்கல்வி பிரிவையும் ரத்து செய்வதற்கு நிா்பந்திக்கக் கூடாது; காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியா் பணி இடங்களை நேரடியாக நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; காலமுறை ஊதியம் வழங்கும் வரை அனைத்து தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும் மாதம் ரூ. 25 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனபனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்கல்வி ஆசிரியா் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் முத்துசெல்வன், அருள் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநில பொருளாளா் செந்தில்நாதன் மற்றும் சங்க உறுப்பினா்கள் குடும்பத்துடன் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT