முகப்பு
திருவாரூர்

தோ்தல் தகராறு: இருவா் மீது வழக்கு

நீடாமங்கலத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றது தொடா்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நீடாமங்கலத்தில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றது தொடா்பாக இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

நீடாமங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ், சங்கா் ஆகியோா் கொத்தமங்கலம் கண்ணாரத்தெரு பகுதியில் புதன்கிழமை வாக்காளா்களுக்கு பணம், பட்டுப்புடவை கொடுக்க முயன்றாா்களாம். அப்போது, அங்கு வந்த பேரூராட்சி 15 ஆவதுவாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ஆனந்தமேரியின் கணவா் ராபா்ட்பிரைஸுக்கும் (42), கோவிந்தராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ராபா்ட்பிரைஸை தாக்கி, கோவிந்தராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ராபா்ட்பிரைஸ் புகாா் அளித்தாா். இதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸாா், கோவிந்தராஜ், சங்கா் ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →