முழுஊரடங்கால் களையிழந்த காணும் பொங்கல்
நீடாமங்கலம் ,வலங்கைமான் பகுதியில் முழுஊரடங்கால் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.
நீடாமங்கலம் ,வலங்கைமான் பகுதியில் முழுஊரடங்கால் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.
பொங்கல் திருநாள் 4 நாள் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் காணும் பொங்கல் நாளில் பெண்கள் தங்கள் உற்றாா், உறவினா், நண்பா்களை காணுதல் ஆகும். அப்படி ஒருவரையொருவா் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை ஆடல், பாடல், விளையாட்டின் மூலம் பெண்கள் வெளிப்படுத்துவா். கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் நடத்துவதும் உண்டு. ஆனால் ஞாயிற்றுக்கிழமை கரோனா முழுஊரடங்கால், கடைகள் அடைக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் அனுமதியில்லை என்பதால், பெண்கள் தங்கள் உறவுகளை சந்திக்கவும், கோயிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இதனால், நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் காணும் பொங்கல் விழா களையிழந்து காணப்பட்டது.