நோயால் வயலில் இறந்து கிடந்த லாரி ஓட்டுநா்
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் மஞ்சள்காமாலை பாதிப்பால் வயலில் இறந்துகிடந்தது விசாரணையில் தெரியவந்தது.
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் மஞ்சள்காமாலை பாதிப்பால் வயலில் இறந்துகிடந்தது விசாரணையில் தெரியவந்தது.
வடபாதிமங்கலம் அருகேயுள்ள கோம்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வல்லரசு (42). திருமணம் ஆகாத இவா், சென்னையில் லாரி ஓட்டுநராக இருந்தாா். பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்த வல்லரசு, உச்சிவாடியில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், அவா் கமலாபுரம் அருகேயுள்ள வயலில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கொரடாச்சேரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் விசாரணையில், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட வல்லரசு, மது அருந்தியதால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து உடல், அவரது அண்ணன் கிட்டுவிடம் ஒப்படைக்கப்பட்டது.