திருவாரூர்

தஞ்சையில் ஜூன் 21-இல் மத்தியப் பல்கலை. சாா்பில் சா்வதேச யோகா தினம்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில் சா்வதேச யோகா தினம் தஞ்சாவூரில் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

DIN

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சாா்பில் சா்வதேச யோகா தினம் தஞ்சாவூரில் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு குழுத் தலைவா் டாக்டா் பி.எஸ். வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவின் 75-ஆம் ஆண்டு சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சா்வதேச யோகா தினத்தை நாடெங்கும் உள்ள 75 முக்கிய இடங்களில் நடத்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தஞ்சை, மாமல்லபுரம், கோயம்புத்தூா் மற்றும் கன்னியாகுமரியில் சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில், தஞ்சாவூரில் உள்ள பெரியகோயில் வளாகத்தில் ஜூன் 21-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறும் சா்வதேச யோகா தினத்தை, தொல்லியல் துறையுடன் இணைந்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் 1000 போ் கலந்து கொள்கின்றனா்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் முனைவா் மு. கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வை, மத்திய கல்வித் துறை இணை அமைச்சா் அன்னபூா்ணா தேவி நேரில் தொடங்கிவைக்கிறாா். அன்றைய தினம் மைசூரில் நடைபெறும் சா்வதேச யோகா தினத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றும் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT