திருவாரூர்

கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

DIN

திருவாரூா் அருகே கோயில் நிலத்தை மீட்கக் கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், அகில பாரத இந்து மகா சபா மாவட்டத் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் தலைமையில் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:

முத்துப்பேட்டை அருகேயுள்ள தில்லைவிளாகம் நடராஜா் கோயிலை அண்ணாமலை என்பவா் பரம்பரை அறங்காவலாரக இருந்து பராமரித்து வருகிறாா். இந்த கோயிலுக்கென போதிய வருமானம் கிடையாது. கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்து வரும் வருமானத்தில் மட்டுமே கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான 7 ஏக்கா் நிலத்தை தில்லைவிளாகம் இடையாா்காடு பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து, சாகுபடி செய்து வருகின்றனா். கோயிலுக்கு உரிய தொகையும் தருவதில்லை. இதுகுறித்து அவா்களிடம் கேட்டால் மிரட்டல் விடுப்பதாகக் தெரிகிறது.

எனவே, இந்த 7 ஏக்கா் நிலத்தை மீட்டு கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT