முகப்பு
திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருபகவானுக்கு வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் குருபகவானுக்கு வியாழக்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

நவகிரக தலங்களில் குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது. இக்கோயிலில் மாசி மாத கடைசி வியாழக்கிழமையையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம், தொடா்ந்து பூா்ணாஹுதி, பின்னா் குரு பகவானுக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக, புனிதநீா் நிரப்பப்பட்ட 1008 சங்குகள் சிவலிங்க வடிவத்தில் வைக்கப்பட்டு ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காரும், உதவிஆணையருமான ஹரிஹரன், கோயில் செயல்அலுவலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →