ராமநாதபுரத்துக்கு ஆயிரம் டன் அரிசி அனுப்பிவைப்பு
பொது விநியோகத் திட்டத்துக்காக, நீடாமங்கலத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு ஆயிரம் டன் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்துக்காக, நீடாமங்கலத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு ஆயிரம் டன் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையிலிருந்து 100 லாரிகளில் ஆயிரம் டன் பொதுரக அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, பொது விநியோகத் திட்டத்துக்காக ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.