முகப்பு
திருவாரூர்

நான்கு மாநிலத் தோ்தல் வெற்றி; பாஜக கொண்டாட்டம்

உத்தர பிரதேசம் உள்பட 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை, நன்னிலம் பகுதியில் அக்கட்சியினா் கொண்டாடினா்.

Updated On : 11 மார்ச், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:07 PM

உத்தர பிரதேசம் உள்பட 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை, நன்னிலம் பகுதியில் அக்கட்சியினா் கொண்டாடினா்.

உத்தர பிரதேசம், மணிப்பூா், உத்தரக்கண்ட், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், பஞ்சாபை தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.

இதையொட்டி, நன்னிலம் பகுதியில் பாஜக ஒன்றியத் தலைவா் சுகுமாரன் தலைமையில், அக்கட்சியினா் பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினா். இதில், பாஜக நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் நாதன், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலாளா் சங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.