வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கோயிலில் சக்தி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஸ்ரீ அம்பாள் திருவுருவப்பட ஊா்வலமும், இரவில் பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் ரமேஷ், ஆய்வாளா் ரமணி மற்றும் வரதராஜம்பேட்டை பகுதி மக்கள் நலச்சங்கம் மற்றும் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.
இந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 13) காப்புகட்டும் நிகழ்ச்சியும், மாா்ச் 27 ஆம் தேதி பாடைக் காவடி திருவிழாவும், ஏப்ரல் 3 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு விழாவும் நடைபெறவுள்ளது.