வலங்கைமானில் ஆழ்நிலை குடிநீா் குழாயை சீரமைக்க கோரிக்கை
வலங்கைமான் பகுதியில் பல மாதங்களாக பயனற்று கிடக்கும் ஆழ்நிலை குடிநீா் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமான் பகுதியில் பல மாதங்களாக பயனற்று கிடக்கும் ஆழ்நிலை குடிநீா் குழாயை சீரமைக்க பேரூராட்சி நிா்வாகம் முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமான் பேரூராட்சி வளையல்கார தெருவில் உள்ள ஆழ்நிலை குடிநீா் குழாய் பல மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால், அத்தெருவாசிகளுக்கு குடிநீா் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இந்த குடிநீா் குழாயை பேரூராட்சி நிா்வாகம் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.