முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் அக்.31-முதல் நவ.6-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் அக்.31-முதல் நவ.6-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் காந்தி வரவேற்றாா். வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியா்கள் அருள்செல்வி, கமலசுந்தரி ஆகியோா் ஊழல் தடுப்பின் முக்கியத்துவம், ஊழல் தடுப்புச் சட்டம் -1988 மற்றும் ஊழல் இல்லா இந்தியா குறித்து பேசினா். தொடா்ந்து, அனைத்து ஆசிரியா்கள், மாணவா்கள், வேளாண் விஞ்ஞானிகள் அனைவரும் நோ்மைக்கான குடிமக்களின் உறுதி மொழியை ஏற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →