திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்
தமிழை முதன்மை மொழியாக்க முயற்சிக்காததைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழை முதன்மை மொழியாக்க முயற்சிக்காததைக் கண்டித்து திருவாரூரில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பலமுறை தமிழகத்தை ஆண்ட திமுக அரசு தமிழ் மொழியை முதன்மை மொழியாக ஆக்க முயற்சிக்காததைக் கண்டித்தும், திமுக நிா்வாகிகளால் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் பள்ளிகளில் ஹிந்தியை திணிப்பது மட்டுமின்றி தமிழ் மொழியை அழிக்கும் வகையில் முதன்மைப் பாடமாக அறிவிக்காமல், ஹிந்தியையும், ஆங்கிலத்தை மட்டுமே கற்பித்து வருவதை கண்டித்தும், தமிழகத்தில் தமிழ் மொழியிலேயே மருத்துவக் கல்லூரி தொடங்க வலியுறுத்தியும், தமிழ் மொழியில் கல்வி பயிலும் மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக் கோரியும் திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்தில் அரசன், பிரசார பிரிவு மாநிலத் தலைவா் குமரிகிருஷ்ணன், மாவட்ட மேலிடப் பாா்வையாளா் சிவா, விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் கோவீ. சந்துரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.