முகப்பு
திருவாரூர்

வலங்கைமான் மாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஆவணி கடைஞாயிறு தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஆவணி கடைஞாயிறு தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்மன் சீதளாதேவி என அழைக்கப்படுகிறாா். இங்கு பங்குனி மாதம் நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். புகழ்பெற்ற இக்கோயிலில் ஆவணி கடைஞாயிற்றுக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. மதியம் 1 மணி அளவில் அம்மன் வெள்ளி வாகனத்தில் வீதியுலாவில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, இரவு மகாமாரியம்மன் கோயில் தெப்பக் குளத்தில், தெப்பத்தில் அம்மன் எழுந்தருளினாா். இதையடுத்து, தெப்பத் திருவிழா 11 மணி அளவில் தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை நடைபெற்றது. தெப்ப பவனியில் எஸ்.ஏ.எஸ். சந்திரசேகரன், ஆலங்குடி ஏ.வி.என். பாலமுருகன் குழுவினரின் நாகசுர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி: முன்னதாக, தெப்பத்தை செலுத்தும் பணியில் அனுபவம் பெற்ற நாகை மாவட்டம், குத்தாலம் பகுதியைச் சோ்ந்த நடராஜன், சுரேஷ், சந்திரமோகன் உள்ளிட்ட 4 போ் ஈடுபட்டிருந்தனா். தெப்பத் திருவிழா முடிந்த பிறகு அதை சரி செய்யும் பணியில் சந்திரமோகன் உள்ளிட்டோா் ஈடுபட்டனராம்.

அப்போது, சந்திரமோகன் காணாமல்போனாராம். தகவலறிந்த வலங்கைமான் தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தேடி குளத்தில் இருந்து சந்திரமோகனின் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →