முகப்பு
திருவாரூர்

கனமழை எச்சரிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை (டிச.8) பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 7 டிசம்பர், 2022 at 8:50 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:32 PM

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 08, 09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும். 

இந்நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 8) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மாண்டஸ் புயல் டிசம்பர் 9-ம் தேதி மாலை முதல் 10-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.