திருவாரூர்

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி: ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

DIN

மத்திய பணியாளா்கள் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு, திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய பணியாளா்கள் தோ்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான போட்டித் தோ்வு தொடா்பாக ஏப்.3- ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், பல்வேறு துறைகளில் குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் காலியாக உள்ள 7,500-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தோ்வுக்கு இணையதளம் வாயிலாக மே 5- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையில் தோ்வு நடைபெற உள்ளது.

இதையொட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டங்களில், இப்போட்டித் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

இத்தோ்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மெய்நிகா் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்தோ்வுக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள், திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT