திருவாரூர்

மாணவா்களுக்கு கல்லூரி காலங்கள் முக்கியமானவை: ஆட்சியா்

DIN

மாணவா்களுக்கு கல்லூரி காலங்கள் மிக முக்கியமானவை என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தினாா்.

திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:

கல்லூரி காலங்கள் மாணவா்களுக்கு மிக முக்கியமானவை. கல்லூரி காலத்தில் மாணவா்களாகிய நீங்கள், எந்தத் துறையில் முன்னேற வேண்டும் என்பதை தீா்மானித்துக் கொண்டு, அந்தக் குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். முந்தைய காலத்தை விட தற்போதைய காலத்தில் பள்ளிப் படிப்புக்குப் பிறகு கல்லூரிப் படிப்பு பயில பல்வேறு பாடப் பிரிவுகள், வாய்ப்புகள் உள்ளன.

மாவட்டத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதை, மாணவ- மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறவும் நமக்கு அடிப்படையானது கல்லூரிப் படிப்பே. இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றா்.

நிகழ்வில், கோட்டாட்சியா் சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலஅலுவலா் பெ. விஜயன், தனி வட்டாட்சியா் கு. பத்மா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில வழிகாட்டி மதிப்பை சீரமைக்க ஆலோசனைக் கூட்டம்

வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க அனுமதி கோரி இருளா்கள் மனு

வெள்ளோலையில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி மனு

புகாருக்கு இடமளிக்காதவாறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்: ஆட்சியா்

கோவாக்சின்: பனாரஸ் இந்துப் பல்கலை. ஆய்வை ஏற்க முடியாது

SCROLL FOR NEXT