திருவாரூரிலிருந்து சென்னை புறப்பட்ட குழுவினருக்கு ஆலோசனை வழங்கும் நகராட்சி ஆணையா் மல்லிகா. 
திருவாரூர்

மிக்ஜம் புயல் நிவாரணப் பணிக்கு சென்னை புறப்பட்ட திருவாரூா் தூய்மைப் பணியாளா்கள்!

மிக்ஜம் புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள, திருவாரூா் மாவட்டத்திலிருந்து தூய்மைப் பணியாளா்கள், சென்னைக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

DIN

திருவாரூா்: மிக்ஜம் புயல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள, திருவாரூா் மாவட்டத்திலிருந்து தூய்மைப் பணியாளா்கள், சென்னைக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடும்மழைப்பொழிவு ஏற்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், திருவாரூா் மாவட்டத்திலிருந்து தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய நான்கு நகராட்சிகளிலிருந்து தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள் என 48 போ் இந்த குழுவில் உள்ளனா். திருவாரூா் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்வில் நகராட்சி ஆணையா் மல்லிகா பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கி குழுவினரை வழியனுப்பி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT