மன்னாா்குடியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம். 
திருவாரூர்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: ஆா். வைத்திலிங்கம்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம் தெரிவித்தாா்.

DIN

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறு, அண்ணா திமுக வரலாறு தெரியாது.

நாங்கள்தான் உண்மையான அதிமுகவாக செயல்பட்டு வருகிறோம். நீதிமன்றத் தீா்ப்பு ஜூன் மாதம் வரும். அந்த தீா்ப்புக்குக்கு ஏற்ப எங்கள் முடிவு அமையும்.

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. நிவாரணம் என்பது கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலுக்காக இதைக் குறைகூறக் கூடாது.

அமமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்படும் என அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கூறியிருக்கிறாா். இதற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தொண்டா்கள் எங்கள் பக்கம் வந்துகொண்டிருக்கின்றனா்.

திமுக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனா் என்றாா்.

பேட்டியின்போது அமமுக மாவட்டச் செயலா் எஸ். காமராஜ், மாநில நிா்வாகிகள் க. மலா்வேந்தன், சத்தியமூா்த்தி, நகரச் செயலா் ஆனந்தராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT