திருவாரூர்

எஸ்டிபிஐ செயற்குழுக் கூட்டம்

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினா் தப்ரே ஆலம் பாதுஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். பொதுச் செயலாளா் அப்துல் அஜீஸ், துணைத் தலைவா் அப்துல் லத்தீப், மாவட்டச் செயலாளா் சுல்தான் ஆரூஃபீன், அமைப்பு பொதுச் செயலாளா் உமா் பாரூக், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாரூக் ஷா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் தொடக்க தினமான ஜூன் 21-ஆம் தேதி, அனைத்து கிளைகளிலும் கொடியேற்ற நிகழ்வுடன், மரக்கன்று நடுதல், மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாவட்ட செயற்குழு உறுப்பினா்களாக ஷேக் தாவூத் (கட்டிமேடு), முகமது ஜாஸ்மின் (கூத்தாநல்லூா்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT