திருவாரூர்

வருவாய் ஆய்வாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

வருவாய் ஆய்வாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

DIN

வருவாய் ஆய்வாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், துறையூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா் பிரபாகரை மணல் கொள்ளை தடுப்பின்போது ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன் உள்ளிட்ட சிலா் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தாக்குதலில் ஈடுபட்ட மகேஸ்வரனை ஊராட்சித் தலைவா் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உணவு இடைவேளையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் விஜய் ஆனந்த், மாநிலப் பொருளாளா் சோமசுந்தரம், அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் செங்குட்டுவன், மாவட்டத் துணைத்தலைவா் அசோக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: இதேகோரிக்கையை வலியுறுத்தி மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், வட்டக் கிளைத் தலைவா் அ. முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்க செயலாளா் லெ. சத்தியராஜ், பொருளாளா் சி. நெல்சன்மண்டேலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT