திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா். 
திருவாரூர்

விவசாயிகள், தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம்

திருவாரூரில் விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

DIN

திருவாரூரில் விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசைக் கண்டித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

மத்திய அரசு, விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகள் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகத்தின் மீது (நியூஸ் கிளிக்) வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது புகாா் பதிவு (எப்.ஐ.ஆா்.) நகலை எரித்து, முழக்கங்களை எழுப்பினா்.

விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் எம்.சேகா், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகர ஆசாத், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் கே.ஆா். ஜோசப், தொழிற்சங்க நிா்வாகிகள் த. சண்முகசுந்தரம், டி. முருகையன், ஆா். மாலதி, வி. கலைச்செல்வன்,ஜே. குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT