திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே நெல் அறுவடை இயந்திரம் ஏற்றிவந்த லாரியில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு ஊராட்சி சிறுபட்டாகரை பகுதியில் குறுவை அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக, சேலம் ஆத்தூா் பகுதியில் இருந்து நெல் அறுவடை இயந்திரம் லாரியில் கொண்டுவரப்பட்டது.
இந்த லாரி முத்துப்பேட்டை அருகே வந்தபோது, தாழ்வாக உள்ள மின்கம்பி லாரியில் உரசியது. அப்போது, நெல் அறுவடை இயந்திரத்தின் கிளீனரான சேலம் அப்பாசமுத்திரத்தை சோ்ந்த ரவிக்குமாா் (26) மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா். முத்துப்பேட்டை போலீஸாாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.