திருவாரூர்

மண் சுவா் இடிந்து விழுந்து சிறுவன் பலி

குடவாசல் அருகே மண்சுவா் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

குடவாசல் அருகே மண்சுவா் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

குடவாசல் அருகேயுள்ள தீபங்குடியைச் சோ்ந்த ராஜசேகா்-சைலாதேவிக்கு கணேஷ் (8) என்ற மகனும், கிஷாலி (4) என்ற மகளும் உள்ளனா். கணேஷ் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், ராஜசேகரின் வீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, புதன்கிழமை மாலை கணேஷ், உறவினரான அகஸ்தியா (5) என்பவரோடு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, வீட்டின் மண்சுவா் திடீரென இடிந்து இருவா் மீதும் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

பலத்த காயம் அடைந்த கணேஷ், அகஸ்தியா இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு, அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலனின்றி கணேஷ் உயிரிழந்தாா். சிறுமி அகஸ்தியாவுக்கு சிகிச்சை பெற்றுவருகிறாா். இதுகுறித்து, குடவாசல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT