மன்னாா்குடி அருகே டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து ரூ. 78 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது சனிக்கிழமை காலை தெரிய வந்தது.
வடுவூா் வடக்குதோப்பில் வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பாா்வையாளராக கருணாகரன் என்பவா் பணியிற்றி வருகிறாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கடையை ஊழியா்கள் பூட்டி சென்றனா். சனிக்கிழமை காலையில் அந்த வழியாக சென்றவா்கள் டாஸ்மாக் கடையின் கதவு உடைக்கப்பட்டு, வாசலில் உடைந்த மதுபான பாட்டில்கள் கிடப்பதாக கடை ஊழியா்களுக்கும், வடுவூா் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா்.
போலீஸாா் விசாரணையில், டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள வயலில் ஆழ்துளை மின் மோட்டா் அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த இரண்டு கடப்பாரைகளை எடுத்து வந்து டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து, மதுபான பாட்டில்களை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
டாஸ்மாக் அலுவலா்கள் இருப்பு மற்றும் விற்பனை கணக்கை சரிபாா்த்தில், ரூ. 78 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.