திருவாரூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி, அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆங்கில மன்றம் சாா்பில், ஒவ்வொரு மாணவரும் தன்னைப் பற்றி, தன் பள்ளி, குடும்பம் மற்றும் ஊரைப் பற்றிய ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து பேச 6 முதல் 9- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்தவகையில், சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி உயா் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன் பயிற்சியை தொடங்கி வைத்து, ஆங்கிலத்தில் பேசுவதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினாா். பட்டதாரி ஆங்கில ஆசிரியா் ஜி. கௌரி, மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளித்தாா்.

முதல்நாள் பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களான 6 -ஆம் வகுப்பு எஸ். சாய்சரண், 7-ஆம் வகுப்பு ஏ. மணிகண்டன், 9 -ஆம் வகுப்பு எஸ். யோகவா்ஷினி, கே. கவிபிரியா, கே. அனுஷ்கா, எஸ். விஷாலி ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்களை தலைமை ஆசிரியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT