திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கோட்டூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆக.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேற்குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளா்கள் சோ்க்கை, நேரடி சோ்க்கை மூலம் நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் நேரடி சோ்க்கைக்கு ஆக.31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளது.
பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா காலணி மற்றும் விலையில்லா பஸ்பாஸ் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 9865072426, 9047643393, 9677394290, 9499055742 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.