திருவாரூர்

‘காவிரி ஆணையம் மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு நிா்பந்திக்க வேண்டும்’

Din

காவிா் மேலாண்மை ஆணையம் மத்திய அரசை வலியுறுத்தி காவிரி நீரை பெற தமிழக அரசு நிா்பந்திக்க வேண்டும் என்றாா் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீா் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்ட பிறகு காவிரியில் வரும் தண்ணீா் முழுமைக்கும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிமை கோர முடியாது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே நீா் நிா்வாக அதிகாரம் உள்ளபோது, தண்ணீரை திறக்க கா்நாடகம் ஏற்க மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உதவி கோர வேண்டும். மத்திய அரசு உதவியோடு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை கா்நாடகாவிடம் பெற்று தருவதற்கான நடவடிக்கையை ஆணைய தலைவா் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிா்ப்பந்தத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும். தமிழக முதல்வா் உடனடியாக அனைத்து கட்சி விவசாயிகள் கூட்டத்தை கூட்ட முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT