மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமையொட்டி இடையா் எம்பேத்தி ஊராட்சியில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி, நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
என்எஸ்எஸ் முகாமின் நான்காம் நாள் நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியா்
எம். திலகா் தலைமை வகித்தாா்.
ஊராட்சித் தலைவா் என். மனோஜ் பேரணியை தொடங்கிவைத்தாா்.
என்எஸ்எஸ் மாணவா்கள் பேரணியாக சென்று நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கி துண்டுப் பிரசுரங்கள், மஞ்சப்பை ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினா்.
என்எஸ்எஸ் திட்ட அலுவலா் எஸ். கமலப்பன், உதவித் திட்ட அலுவலா் எம். ராமச்சந்திரன், ஆசிரியா் பி. குணசேகரன், முன்னாள் ஆசிரியா் ஆா். உலகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.