ரயில்வே கேட் பராமரிப்பு பணி
நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையில் சம்பாவெளி ரயில்வேகேட் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையில் சம்பாவெளி ரயில்வேகேட் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடி செல்லும் நெடுஞ்சாலையில் சம்பாவெளி கிராம பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இது நீடாமங்கலம்-மன்னாா்குடி ரயில் பாதையாகும்.
மன்னாா்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்கள் செல்கின்றன.
இந்த ரயில்வேகேட் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை காலை சுமாா் 9.30 மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது. ரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிக்கு ரயில்வே கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் மாற்று வழிகளில் இயக்கப்பட்டன.