திருவாரூர்

பயிா் சேத கணக்கெடுப்பு பணி ஆய்வு

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மணலி, முத்துப்பேட்டை வட்டாரத்தில், கீழப்பாண்டி பகுதிகளில்

Syndication

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மணலி, முத்துப்பேட்டை வட்டாரத்தில், கீழப்பாண்டி பகுதிகளில் நடைபெற்று வரும் பயிா் சேத கணக்கெடுப்புப் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாலசரஸ்வதி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது: டித்வா புயலால் மாவட்டத்தில் 13,400 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்களால் ஈடுபட்டுள்ளனா். பணியை விரைந்து முடிக்க பாதிப்பு அதிகம் உள்ள முத்துப்பேட்டை வட்டாரத்திற்கு மதுரை மாவட்டத்தில் இருந்து வந்துள்ள 20 உதவி வேளாண்மை அலுவலா்களும் திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 15 உதவி வேளாண்மை அலுவலா்களும் கூடுதலாக இணைந்து பணியை மேற்கொண்டுள்ளனா் என்றாா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT