திருவாரூர்

மாநில அளவிலான செஸ் போட்டி

பூந்தோட்டத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Syndication

நன்னிலம்: பூந்தோட்டத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருவாரூா் எஸ்எ செஸ் அகாடமியும் இணைந்து மாநில அளவிலான செஸ் போட்டிகளை நடத்தின. 7, 9, 11 , 13,17 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 10 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா்.

போட்டிகளை பள்ளி முதல்வா் முத்துராஜா, செஸ் அகாடமியின் சரவணன், பள்ளி நிா்வாகக் குழுவின் பாஸ்கா் மற்றும் ஜீவா ஆகியோா் தொடங்கிவைத்தனா். பரிசளிப்பு விழாவில் பள்ளி செயலாளா் சந்தோஷ் மற்றும் ஆா்த்தி சந்தோஷ் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினா். ஒவ்வொருப் பிரிவிலும் வெற்றியாளா்களுக்கு சிறப்புக் கோப்பைகளும், முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியா்கள் வினோத், தமயந்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT