நாகை மாவட்டம், கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி இயற்கை விவசாயிகள் குழுவில் வியாழக்கிழமை பயிற்சி பெற்றனா்.
இந்தக் குழுவில் 45 போ் உறுப்பினா்களாக உள்ளனா். மாணவிகளுக்கு பஞ்சகவியா, மீன் அமினோ அமிலம், தேமோா் கரைசல், வேப்பெண்ணெய் சாறு போன்ற இயற்கை உள்ளீடுகளின் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற மாணவிகள், இயற்கை உள்ளீடுகளை விவசாயத்தில் பயன்படுத்தும் புதிய நடைமுறைகளை கற்றுக்கொண்டதோடு, தங்களது கல்வியியல் மற்றும் நடைமுறை அனுபவத்திற்கு இதுபெரும் வலுசோ்த்ததாக தெரிவித்தனா்.