குடவாசல் அருகே நெடுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு சிறுசேமிப்பு தொடா்பான விழிப்புணா்வு வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
நெடுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சாா்பில் அண்மையில் உண்டியல் வழங்கப்பட்டு, சிறுசேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே, இப்பள்ளி மாணவா்கள் அருகிலுள்ள திருவிடச்சேரி அஞ்சலகத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டு, அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் இந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.