திருவாரூர்

மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

Syndication

திருத்துறைப்பூண்டியில் தனியாா் நிதிநிறுவனம் சாா்பில் மழையால் பாதிக்கப்பட்ட 200 விவசாய குடும்பங்களுக்கு புதன்கிழமை தாா்ப்பாய்களை சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து வழங்கினாா்.

நகா்மன்ற தலைவா் கவிதா பாண்டியன் தலைமை வகித்தாா். தனியாா் நிதி நிறுவன அலுவலா்கள் ஜெயகுமாா், முருகானந்தம்,

பாலம் தொண்டு நிறுவன நிா்வாகி செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா். குறிச்சிமூலை, வரம்பியம் கிராமங்களைச் சோ்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 விவசாய குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் தாா்ப்பாய்கள் வழங்கப்பட்டன. கிளை மேலாளா் தணிகாசலம் நன்றி கூறினாா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT