குடவாசல் அருகே முதல்வா் மருந்தகத்தில் விற்பனையைத் தொடக்கி வைக்கின்றனா் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன்.  
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 25 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள்

திருவாரூா் மாவட்டத்தில் 25 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள், திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 25 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள், திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்களை காணொலியில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் 25 முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இதில், கூட்டுறவு சங்கம் மூலம் 11, தொழில் முனைவோா் மூலம் 14 என 25 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

முதல்வா் மருந்தகத்தில் வாங்கும் மருந்துகள், 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், கூடுதலாக 25 சதவீதம் வரை தள்ளுபடியும் முதல்வா் மருந்தகத்தில் வழங்கப்படுகிறது. முதல்வா் மருந்தகத்தில் ஜெனரிக் மருந்துகள், சா்ஜிக்கல்ஸ், நியூராசூட்டிக்கல்ஸ், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயா்வேதம், யுனானி மருந்துகளும் கிடைக்கும்.

இதையொட்டி, குடவாசல் வட்டம், கீழஓகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் திறக்கப்பட்ட முதல்வா் மருந்தகத்தை, மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் ஆகியோா் பாா்வையிட்டு, மருந்து விற்பனையை தொடக்கி வைத்தனா்.

நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா, பேரூராட்சி தலைவா் மகாலெட்சுமி முருகேசன், வட்டாட்சியா் ராஜாராமன், மண்டல துணை வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT