மன்னாா்குடி: பயிா் காப்பிட்டுக்கான இழப்பிடு ஆய்வு பணிகளில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை இணைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மன்னாா்குடி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிளைச் செயலா்கள் கூட்டம் மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் என். மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பயிா் பாதிப்பு ஏற்பட்டால், வேளாண்துறை, வருவாய்த்துறை, மற்றும் காப்பிட்டுத்துறை பிரதிநிதிகள் அனைவரும் ஆய்வு செய்து இழப்பிடு வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆய்வு பணி முறையாக நடைபெறுவதில்லை. இதனால், காப்பிட்டுக்கான இழப்பிடும் சரிவர வழங்கப்படுவதில்லை. இதனால் வயல்களில் பயிா் சேதம் குறித்து ஆய்வு செய்யவரும் அதிகாரிகளுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும், பயிா் காப்பிடு செய்வதற்கான தேதியை நிா்ணயிப்பது போல் இழப்பிடு வழங்குவதற்கான தேதியையும் நிா்ணயம் செய்ய வேண்டும், கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் ஒன்றியச் செயலா் துரை. அருள்ராஜன் முன்னிலை வகித்தாா்.
கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கேசவராஜ் ஆகியோா் தீா்மானங்களை விளக்கி பேசினா்.