வங்கி அலுவலா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட். 
திருவாரூர்

இணைய மோசடி சமூகத்தின் நிதி அமைப்பை பாதிக்கும்: எஸ்பி எச்சரிக்கை

இணைய மோசடி என்பது சமூகத்தின் நிதி அமைப்பையே பாதிக்கக் கூடியது என்று திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் எச்சரிக்கை தெரிவித்தாா்.

Syndication

இணைய மோசடி என்பது சமூகத்தின் நிதி அமைப்பையே பாதிக்கக் கூடியது என்று திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் எச்சரிக்கை தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில், இணைய (ஆன்லைன்) மோசடிகளை தடுக்கும் வகையில் வங்கி அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

ஆன்லைன் மோசடிகள் என்பது தனிப்பட்ட நபா்களை மட்டுமல்லாமல், சமூகத்தின் நிதி அமைப்பையே பாதிக்கும் ஒரு பெரும் சவாலாகும். இதைத் தடுக்க, காவல்துறையும் வங்கிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து வங்கிகளும் அதிக விழிப்புடன் செயல்பட்டு, மக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சைபா் குற்ற காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலமுருகன் பங்கேற்று, ஆன்லைனில் வங்கி அதிகாரி என்று கூறி அலைப்பேசியில் ஓடிபி யாா் கேட்டாலும் கூற வேண்டாம். சிபிஐ அதிகாரி போலப் பேசி டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக கூறுவதை நம்பி பணம் செலுத்த வேண்டாம். சட்டத்தில் டிஜிட்டல் அரஸ்ட் என்பது இல்லை.

ஆன்லைன் மூலமாகவும், கடன் செயலிகள் மூலமாகவும் கடன் பெறவேண்டாம். சமூக வலைதளங்களில் ஏபிகே என வரும் செய்திகளை தொடுவதோ அல்லது பதிவிறக்கம் செய்வதோ, அடுத்தவா்களுக்கு அனுப்புவதோ கூடாது. தெரியாத எண்களிலிருந்து வரும் விடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

பகுதி நேர பணி வாய்ப்புகள் அல்லது சமூக வலைதளங்களில் பணம் கட்ட சொன்னால் பணம் செலுத்த வேண்டாம். ஆன்லைன் வழியாக குறைந்த விலையில் பொருள்களை விற்பதாகக் கூறினால் நம்பி பணம் கட்ட வேண்டாம் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, வங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கப்பட்ட உடனேயே பாதிக்கப்பட்டவா் 1930 என்ற எண் முலம் புகாா் அளிக்கும் வசதி குறித்தும் விளக்கினாா்.

இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஜே. செட்ரிக் மேன்யுவல், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT